இளவயதில் பலவிதமான நண்பர்கள் உங்களுக்குக் கிடைப்பார்கள்ளூஎனினும், எல்லாரையும் நண்பர்களாக்கிக்கொண்டு, அவர்களோடு சேர்ந்து பயணிப்பது உங்களை ஆபத்தான இடத்திற்குக் கொண்டுசெல்லக்கூடும். அப்படியல்லாமல், யார் நல்லவர்கள் மற்றும் யார் கெட்டவர்கள் என்பதை அறிந்து, சரியான ஆலோசனைகளைக் கொடுக்கும் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதே நம்மை வெற்றிப் பாதைக்கு நேராக அழைத்துச் செல்லும். தவறான நண்பர்களோடு இணைவது நம் உயிருக்கு நாமே உலை வைத்துக்கொள்வதற்குச் சமமானதுளூ இதனால் பேரழிவில் நாம் சிக்கிக்கொள்ள வாய்ப்பு அதிகம் (நீதி. 1:14-18).
அம்னோன் ராஜகுமாரனாக இருந்தான்ளூ அவன் தாவீதின் முதற்பேறானக் குமாரன். ராஜாவாக முடிசூடப்படும் தகுதியும் அவனுக்கு இருந்தது. ராஜாவின் மகனாகப் பிறந்ததால், அவனுக்கு எல்லா வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தன. ஆனால், அவன் தனது வாழ்க்கையில் சரியான நண்பனையும் நல்ல ஆலோசகரையும் தேர்ந்தெடுக்கவில்லை. தன் நெருங்கிய உறவினரான யோனாதாபை நண்பனாகவும் ஆலோசகராகவும் தேர்ந்தெடுத்தான். ஆனால், யோனாதாபோ மகா தந்திரமானவன்ளூ பிறரை வஞ்சகமாகப் பேசி, தவறான ஆலோசனைகளால் அழிவிற்குத் தள்ளுகிற குணமுடையவன். சிலர் வெளியில் மென்மையாகவும் கனிவாகவும் பேசுவார்கள்;ளூ ஆனால், அவர்களது உள்ளத்திலோ ஓநாயின் குணம் மறைந்திருக்கும். தேவனை அறிந்த பிள்ளைகள் தேவபயமுள்ள பக்தியுள்ளவர்களையே நண்பர்களாகவும் ஆலோசகர்களாகவும் தேர்ந்தெடுக்க வேண்டும். அம்னோனின் மனதில் அவனுக்கே தெரியாமல் தவறான ஆசை துளிர்விட்டது. தனது சகோதரி முறைமையான தாமாரின் மேல் அவன் கண்கள் அலைந்தன. அந்த இச்சையைக் கட்டுப்படுத்தாமல் விட்டதால், அது அவனுக்குள் பெரிய மரமாக வளர்ந்தது. அவனால் தூங்க முடியவில்லை, படிக்க முடியவில்லை, எந்த காரியத்திலும் கவனம் செலுத்த முடியவில்லைளூ அவனுடைய சரீரமும் நாளுக்கு நாள் மெலிந்தது.
பிரியமான தேவபிள்ளைகளே! இப்படிப்பட்டச் சோதனைகள் இளவயதில் பலருக்கும் வரக்கூடியவையே. இப்படிப்பட்ட நேரத்தில், உடனே நம் கண்களைக் கட்டுப்படுத்தவேண்டும் (மத் 5:28-30), மனதை அடக்கவேண்டும். இப்படிப்பட்ட இச்சைகள் நம் அவயங்களில் போர்செய்து நம்மை வீழ்த்தாதபடிக்கு நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.
அம்னோன் இச்சைக்கு இடங்கொடுத்ததால், அது அவனுக்குள் கர்ப்பம் தரித்தது (யாக்கோபு 1:14,15). அம்னோன் இந்தக் காரியத்தை யோனதாபிடம் பகிர்ந்தபோது, யோனதாப், அவனுக்கு சரீர இச்சையை அடக்கும்படி அறிவுரை சொல்லாமல், அதை நிறைவேற்றுவதற்கான தீய ஆலோசனையையே கொடுத்தான் (2சாமு. 13:1-5). அதன் விளைவாக, அம்னோன் யோனதாபின் கெட்ட ஆலோசனையின்படி நாடகமாடி, பாவம் என்ற குழியில் விழுந்தான். அந்த தவறான நட்பும் ஆலோசனையும் அவன் வாழ்க்கையை அழிவிற்குக் கொண்டுசென்றது. இறுதியில் அவன் வாழ்வு அவமானத்திலும் மரணத்திலும் முடிந்தது.
இன்றும் அநேக இளைஞர்கள் நண்பர்களின் தவறான வழிநடத்துதலால் வாழ்க்கையை இழந்து வருகின்றனர். 'ஒரு முறை தான்", 'இது சாதாரணம்", 'எல்லாரும் இப்படித்தான் செய்கிறார்கள்" என்று சொல்லி, இளைஞர்களை தவறான பாதைக்கு இழுத்துச் செல்லும் எண்ணற்ற நண்பர்கள் நம்மைச் சுற்றிலும் உண்டு. ஆரம்பத்தில் அவர்களது ஆலோசனைகளும் அறிவுரைகளும் சந்தோஷமாகவும் சுதந்திரமாகவும் தோன்றலாம்; ஆனால், அதன் முடிவு வேதனையிலும் அழிவிலுமே என்பதை இன்றைய இளைஞர்களாகிய நீங்கள் அறிய வேண்டும்.
ஆகையால், பிரியமான வாலிபரே! இளவயதில் நட்பைத் தேர்ந்தெடுக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். தேவனுக்குப் பயப்படுகிறவர்களையும் நல்ல குணமுள்ளவர்களையும் தேர்ந்தெடுத்து, அவர்களோடு பழக வேண்டும். நம்மை தேவனிடமிருந்து விலக்குகிறவர்களை விட, தேவனிடத்தில் நெருக்கமாக நடத்துகிற நண்பர்களே உண்மையான நண்பர்கள். 'ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்;. மதிகேடரோடே தோழனாயிருக்கிறவனோ நஷ்டமடைவான்" (நீதி. 13:20).
இந்த வாலிப வயதில், நல்வழியில் நடத்துகிற நண்பர்களை தேர்ந்தெடுப்போம், ஒருவேளை தவறான நண்பர்களைக் கொண்டிருந்தால், இன்றே அவர்களை விட்டு விலக தீர்மானம் எடுப்போம். தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்!